தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கான அமைதி உதவித்தொகை

ஆசிரியர்களுக்கான அமைதி உதவித்தொகை

ஆசிரியர்களுக்கான அமைதி உதவித்தொகை


UPDATED : ஜன 13, 2011 12:00 AM

ADDED : ஜன 13, 2011 03:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2011 12:00 AM ADDED : ஜன 13, 2011 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தியானப் பயிற்சிக்காக தாய்லாந்து செல்வதற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.


&'அமைதி புரட்சி உதவித்தொகை&' என்ற பெயரில் கல்லூரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மனம் தெளிவடைந்து அதன்மூலம் சீரிய நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில், அடிப்படையான தியான நுட்பங்கள் இந்த திட்டத்தில் கற்றுக்கொடுக்கப்படும்.


இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜனவரி 31. இப்பயிற்சியானது தாய்லாந்து நாட்டில் ஜூலை 11 முதல் 25 வரை நடைபெறும். தாய்லாந்தில் 2 வாரங்கள் தங்கியிருப்பதற்கான செலவுகள், உணவு, உள்ளூர் போக்குவரத்து செலவுகள் போன்றவை இந்த உதவித்தொகையில் அடக்கம்.


விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் பயோடேட்டா மற்றும் சமீபத்திய புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். இதுசம்பந்தமான விரிவான விவரங்களுக்கு www.peacerevolution2010.org என்ற வலைத்தளம் செல்லவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us