தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உலக பாரம்பரிய சின்னம்?

விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உலக பாரம்பரிய சின்னம்?

விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உலக பாரம்பரிய சின்னம்?


UPDATED : ஜன 14, 2011 12:00 AM

ADDED : ஜன 14, 2011 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2011 12:00 AM ADDED : ஜன 14, 2011 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நோபல் பரிசுபெற்ற வங்காள கவிஞர் ரபீந்தரநாத் தாகூரால் நிறுவப்பட்ட விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்த பரிசீலனை நடந்து வருகிறது.


மத்திய கலாச்சார செயலர் ஜவஹர் சர்கார் இதுகுறித்து கூறுவதாவது, "யுனெஸ்கோ குழு இப்பல்கலை வளாகத்திற்கு வந்து, அதன் கருத்துக்களை கூறிவிட்டு சென்றது. அவற்றில் முக்கியமானது, இந்த விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சம்பந்தமாக அவர்கள் தரப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் உள்ளன என்பது.


எனவே நாங்கள் உடனடியாக 2 ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்துள்ளோம். ஒரு குழு பல்கலை சம்பந்தப்பட்டதாகவும், ஒரு குழு முழு ஒருங்கிணைப்பு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். நாங்கள் யுனெஸ்கோ குழுவின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளோம். எனவே எங்களுக்கு, இப்பல்கலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


கடந்த 1921 ம் ஆண்டு நிறுவப்பட்ட விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us