ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு என்.சி.டி.இ., கடும் எச்சரிக்கை
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு என்.சி.டி.இ., கடும் எச்சரிக்கை
UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தென் மண்டல தேசிய ஆசிரியர் கல்வி குழு (என்.சி.டி.இ.,) கூட்டம் பெங்களூருவில் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு என்.டி.சி.இ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறந்த முறையில் கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு என்.சி.டி.இ., விதிமுறைகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதில் சாதகமான பதில் கிடைக்கும். இதில் ஏஜென்டுகளின் தலையீடு ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே, யாரும் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
புதிய விதிமுறைகளின்படி ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு அனுமதி பெற்று தற்காலிக அல்லது வாடகைக் கட்ட்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்கள், அனுமதி பெற்ற தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சொந்தக் கட்டடத்திற்கு மாறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 2009-2010ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனடியாக இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் பள்ளியில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் புகைப்படங்களுடன் இடம்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.