போதிய இட வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
போதிய இட வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் ஒரே வகுப்பறையில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடவசதியின்றி படிக்கின்றனர்.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ல் ஏ குருப்பில் இந்த ஆண்டு அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த பள்ளி ஏற்கனவே இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த ஆண்டு அதிக மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
ஒரே வகுப்பறையில் மாணவ, மாணவிகள் உரசிக் கொண்டு மிகுந்த சிரமத்திற்கிடையே படிக்கின்றனர். ஏராளமான மாணவர்கள் வகுப்புக்கு வெளியே உட்காரும் நிலை உள்ளது.
வெளியே உட்கார்ந்து படிக்கும் மாணவர்கள் சுவரை ஓட்டி உட்கார்ந்திருப்பதால் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் வெளியே இருப்பவர்களுக்கு கேட்காத நிலை உள்ளது. ஒரே வகுப்பில் 120 மாணவ,மாணவிகளை வைத்து சமாளிப்பதும் ஆசிரியருக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள இந்த அவல நிலையை போக்க கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் ஏற்பாடு செய்ய விழுப்புரம் சி.இ.ஓ.,நடவடிக்கை வேண்டும்.