தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேரடி ஒளிபரப்பில் பட்டமளிப்பு விழா

நேரடி ஒளிபரப்பில் பட்டமளிப்பு விழா

நேரடி ஒளிபரப்பில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜன 24, 2011 12:00 AM

ADDED : ஜன 24, 2011 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2011 12:00 AM ADDED : ஜன 24, 2011 02:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டிலேயே முதல் முறையாக பட்டமளிப்பு விழாவை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய மும்பை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பட்டதாரிக்கும், படிப்பை முடித்து பட்டம் வாங்கும் நேரம், அவர்களது வாழ்க்கையில் சிறப்பான தருணமாக உணர்வார்கள். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் பட்டம் வாங்குவதை பார்த்து மகிழ்ச்சியடைவர்.


இத்தகைய உன்னதமான நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ நேரடியாக வந்து கலந்து கொள்ள முடிவதில்லை. மேலும் சில நேரங்களில் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான மாணவர்களைதான் விழாவில் பங்கேற்க அனுமதிக்கும்.


இதனை கருத்தில் கொண்டு இவர்களுக்காக பட்டமளிப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்ப மும்பை பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும். இப்பல்கலைக்கழகம் வரும் பிப். 5ம் தேதி www.mu.ac.in என்ற இணையதளத்தில் பட்டமளிப்பு விழாவை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது.


இது மற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களும் இதனை கடைபிடித்தால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறுவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us