தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காக்னிசன்ட் நிறுவனத்தில் 25 ஆயிரம் பணி வாய்ப்புகள்

காக்னிசன்ட் நிறுவனத்தில் 25 ஆயிரம் பணி வாய்ப்புகள்

காக்னிசன்ட் நிறுவனத்தில் 25 ஆயிரம் பணி வாய்ப்புகள்


UPDATED : ஜன 31, 2011 12:00 AM

ADDED : ஜன 31, 2011 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2011 12:00 AM ADDED : ஜன 31, 2011 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் காக்னிசன்ட் எனப்படும் சி.டி.எஸ்., நிறுவனம் முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 25 ஆயிரம் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ளும் விதத்தில் இந்தப் புதிய பணி நியமனங்கள் செய்யப்படும் என்று இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.டி.எஸ்., நிறுவனம் கடந்த இரண்டு காலாண்டுகளில் 38.8 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.


இந்த நிறுவனத்தின் கேம்பஸ் முறையிலான பணி நியமனங்களை முடித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது உள்ள பொருளாதார வளர்ச்சி நிலையில் இந்த ஆண்டு முடிவுக்குள் முற்றிலும் புதிய 25 ஆயிரம் பணி நியமனங்களைச் செய்ய உள்ளதாக இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.


சி.டி.எஸ்., நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் பல்வேறு நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. பண்டலாவில் உருவாக்கப்பட்டு வரும் சி.டி.எஸ்., நிறுவன வளாகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் வல்லுனர்கள் பணி புரியும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை சி.டி.எஸ்., நிறுவனம் 200 கோடி ரூபாய் மூலதனத்தை இந்த வளாகத்திற்காக இட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us