புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் நிர்வாகப் பயிற்சியாளர் இடங்கள்
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் நிர்வாகப் பயிற்சியாளர் இடங்கள்
UPDATED : பிப் 01, 2011 12:00 AM
ADDED : பிப் 01, 2011 02:31 PM
இந்தியாவின் உணவுக் கொள்கைகளை நிறைவேற்றும் அடிப்படையில் 1964ஆம் ஆண்டு புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எப்.சி.ஐ.,) என்ற
இந்திய உணவுக் கழகம் துவங்கப்பட்டது. விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது, நாடெங்கும் உணவு தானியங்களை சரியான விதத்தில் பகிர்ந்தளிப்பது, இந்திய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட தலையாய பணிகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் நாடு தழுவிய அளவில் பல்வேறு மண்டலங்களிலும் டெப்போ, அக்கவுண்ட்ஸ், ஜெனரல், மூவ்மென்ட் ஆகிய பிரிவுகளில் 606 நிர்வாகப் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தென் மண்டலத்தில் டெப்போ பிரிவில் 21 இடங்களும், அக்கவுண்ட்ஸ் பிரிவில் 38 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
கல்வித் தகுதி
எப்.சி.ஐ.,யின் டெப்போ பிரிவு நிர்வாகப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக இரண்டு ஆண்டு காலம் முழு நேரப் படிப்பாக முது நிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை நிர்வாகவியல், இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
இந்தப் படிப்புகளைப் பகுதி நேரப்படிப்பாக முடித்தவர்கள் மூன்றாண்டு காலம் படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். அக்கவுண்ட்ஸ் பிரிவு மேனேஜ்மெண்ட் டிரெய்னி பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சி.ஏ., ஏ.ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ.,(நிதி ) ஆகிய ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
எப்.சி.ஐ.,யில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவிக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தென் மண்டலத்திற்கான எழுத்துத் தேர்வு 08.05.2011 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
இந்திய உணவுக் கழகத்தின் நிர்வாகப் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300/க்கான டி.டி.,யை ''Food Corporation of India'' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக இரண்டு டி.டி.,களையும் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு இந்தக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி
எப்.சி.ஐ.,யின் நிர்வாகப் பயிற்சியாளர் பதவிக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் 21.02.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை 08.03.2011க்குள் இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். இணைய தள முகவரி www.fciweb.nic.in/
