தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரான்ஸ் வேளாண் மாணவர்கள் காரைக்கால் வயல்களில் ஆய்வு

பிரான்ஸ் வேளாண் மாணவர்கள் காரைக்கால் வயல்களில் ஆய்வு

பிரான்ஸ் வேளாண் மாணவர்கள் காரைக்கால் வயல்களில் ஆய்வு


UPDATED : பிப் 07, 2011 12:00 AM

ADDED : பிப் 07, 2011 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2011 12:00 AM ADDED : பிப் 07, 2011 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில், பிரான்ஸ் நாட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள் நெல் வயல்களை பார் வையிட்டனர். இந்திய விவசாய முறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், வேளாண் தொழில் நுட்ப முறைகள் மற்றும் இந்தியாவில் புதிதாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள, விவசாய பயிர்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும்.


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிசே அக்ரிகால் என்ற வேளாண் பள்ளி பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் 15 பேர் நேற்று முன்தினம் காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் மேல் ஓடுதுறை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள, நெல் வயல்களை பார்வையிட்டனர்.


தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் அறுவடை செய்யும் முறைகள் குறித்து, பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். இங்கு ஒரு மாதம் தங்கி வேளாண் முறைகளை தெரிந்து கொள்ளவுள்ளதாக கூறினர். பிரான்ஸ் நாட்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் அனந்தகுமார் விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us