ஆந்திரா வங்கியில் அதிகாரி மற்றும் கிளரிகல் பணி அறிவிப்பு
ஆந்திரா வங்கியில் அதிகாரி மற்றும் கிளரிகல் பணி அறிவிப்பு
UPDATED : பிப் 09, 2011 12:00 AM
ADDED : பிப் 09, 2011 11:18 AM
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கி நாடு தழுவிய கிளைகளைக் கொண்டது. இந்த வங்கியில் 450 புரொபேஷனரி அதிகாரி மற்றும் 1000 கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
ஆந்திரா வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2010 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.12.2010 அன்று வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளன. முழு விபரங்களறிய இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழித்திறன் கூடுதலாகத் தேவைப்படும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
ஆந்திரா வங்கியின் கிளரிகல் மற்றும் புரொபேஷனரி அதிகாரிப் பணியிடங்கள் இரண்டிற்குமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு நிலைகளைக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வு பற்றிய முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு மையங்கள்
ஆந்திரா வங்கியின் கிளரிகல் மற்றும் புரொபேஷனரி அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தள முகவரி: www.andhrabank.in
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு
புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400/ஐயும். கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250/ஐயும் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.75/ மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு ஆந்திரா வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்றோ அல்லது பிற வங்கிகளிலிருந்து நெப்ட் முறையிலோ செலுத்தலாம். பணத்தை செலுத்திய பின் தவறாமல் ரசீதினைப் பெறவும்.
விண்ணப்பிப்பது எப்படி
ஆந்திரா வங்கியின் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான ஒரு இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் முழு தகவல்களையும் இணைய தளத்திலிருந்து பெறவும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 22.02.2011
