பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு
பிளஸ் 2 தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு
UPDATED : பிப் 10, 2011 12:00 AM
ADDED : பிப் 10, 2011 03:47 PM
சென்னை: ‘தனித்தேர்வர்கள், ‘தத்கல்’ திட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வுக்கு, விண்ணப்பிக்காத மற்றும் தாமதமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ‘தத்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில், விண்ணப்பிக்கும் தனிதேர்வர்கள், அதற்கான சிறப்பு கட்டணம் 1,000 ரூபாய் மற்றும் தேர்வுக் கட்டணத்தை (புதிய விண்ணப்பதாரருக்கு மட்டும்) ஏதேனும் ஒரு தேசியமய வங்கியில், ‘அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6’ என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுக்க வேண்டும்.
இத்துடன், தேர்வு விண்ணப்பம், மதிப்பெண் சான்றிதழை அனுப்ப சுய முகவரியிட்ட 30 ரூபாய்க்கான, ‘ஸ்டாம்ப்’ ஒட்டப்பட்ட அஞ்சல் உறை, ஆகியவற்றை வரும் 17ம் தேதி, மாலை 5 மணிக்குள், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகம், சென்னை-6 என்ற முகவரியில் நேரில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு விண்ணப்பங்கள், சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலு<வலர் அலுவலங்கள், அனைத்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள் (சென்னை தவிர), இணை இயக்குனர்(கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில், வரும் 14, 15 மற்றும் 17ம் தேதிகளில் கிடைக்கும்.
தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் சென்னையில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
