தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணிதம் கசக்குமா?

கணிதம் கசக்குமா?

கணிதம் கசக்குமா?


UPDATED : பிப் 14, 2011 12:00 AM

ADDED : பிப் 14, 2011 02:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2011 12:00 AM ADDED : பிப் 14, 2011 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய நவீன கல்வி முறையில் புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன. மாணவர்களும் அந்த படிப்புகளில் சேரவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தற்போது கணிதம் படித்தவர்களின் தேவை அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது ஆண்டுதோறும் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.


தகவல் தொழில்நுட்ப துறையின் அசுர வளர்ச்சியால் அதிகளவிலான மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் கணித படிப்பு தான் அறிவியல், இன்ஜியரிங் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு அடிப்படை. கணிதம் படித்தவர்கள் எளிதாக இத்துறைகளில் சாதிக்க முடியும். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் கணிதம் படித்தவர்கள் அதிகளவில் சாதிக்கின்றனர்.


கணிதத்தில் இளநிலை , முதுநிலை பட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்பை முடித்தவர்கள் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். மேலும் பகுதிநேர ஆசிரியர்களாகவும் பணியாற்றலாம். பி.பி.ஓ., உள்ளிட்ட துறைகளிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us