பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை பல்கலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு
UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, தனியார் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.,) காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
எஸ்.எப்.ஐ., கோவை மாவட்ட தலைவர் கரீம் பேசுகையில், “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.5.25 கோடி வழங்குகிறது அரசு. பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன கட்டடம், ஆசிரியர், அலுவலர்கள் அனைவருமே அரசின் சொத்து.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தை தனியார் பல்கலையாக்கினால், கல்வி வியாபாரமாகிவிடும். இதனால் பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, பல்கலையாக தரம் உயர்த்த மாணவர்கள் ஒரு போதும் அனுமதிக்க கூடாது,” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.