தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலும் 3 இந்திய மாணவர்களிடம் கண்காணிப்பு கருவி அகற்றம்

மேலும் 3 இந்திய மாணவர்களிடம் கண்காணிப்பு கருவி அகற்றம்

மேலும் 3 இந்திய மாணவர்களிடம் கண்காணிப்பு கருவி அகற்றம்


UPDATED : பிப் 17, 2011 12:00 AM

ADDED : பிப் 17, 2011 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2011 12:00 AM ADDED : பிப் 17, 2011 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: டிரிவேலி பல்கலை.,யில் பயின்ற மேலும் 3 இந்திய மாணவர்கள் கால்களில் இருந்து கண்காணிப்பு கருவி அகற்றப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரிவேலி பல்கலைக் கழகம், ஆண்டுக்கு 144 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே விசா அளிக்க முடியும். ஆனால், விசா மோசடி செய்து 1,555 மாணவர்களை தங்கள் பல்கலைக் கழகத்தில் சேர்த்துள்ளது. இந்த விவகாரம் தெரிய வந்ததால், அமெரிக்க குடியேற்றத் துறையினர் இந்த பல்கலைக் கழகத்தை மூடி விட்டனர்.


அது மட்டுமல்லாது, இந்த பல்கலைக் கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் பலர் முறையான விசா இல்லாமல் படித்ததும் தெரிய வந்தது. இதனால், இந்த மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்கள் காலில் எலக்ட்ரானிக் கண்காணிப்பு பட்டைகளை கட்டி விட்டனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.


இந்நிலையில் இந்தியாவின் தலையீட்டின் பேரில் டிரிவேலியில் பயின்ற இந்திய மாணவர்கள் கால்களில் இருந்து கண்காணிப்பு கருவிகள் அகற்றப்பட்டு வருகிறது. 18 மாணவர்கள் இவ்வாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது 3 மாணவர்களின் கால்களில் இருந்து கண்காணிப்பு கருவிகள் அகற்றப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 5 மாணவர்களின் கால்களில் இருந்து கருவிகள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us