தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லாத குழந்தைகள் கோவையில் 4,273 பேர்!

பள்ளி செல்லாத குழந்தைகள் கோவையில் 4,273 பேர்!

பள்ளி செல்லாத குழந்தைகள் கோவையில் 4,273 பேர்!


UPDATED : பிப் 17, 2011 12:00 AM

ADDED : பிப் 17, 2011 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2011 12:00 AM ADDED : பிப் 17, 2011 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் வந்து தங்குகின்றனர். குடும்பத்துடன் வரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தன்னுடன் வருவாய் ஈட்ட அழைத்துச் சென்று விடுகின்றனர். பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசை இருந்தும் ஏழ்மையால், பல மாணவர்கள் படிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.


சில மாணவர்களின் பள்ளிப் படிப்பு முடங்க, அவர்களின் ஏழை பெற்றோரே காரணமாக அமைந்து விடுகின்றனர். கட்டடப் பணி, பனியன் நிறுவன பணி என பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊரை விட்டு இடம் பெயரும் பெற்றோரால், அவர்களின் குழந்தைகளின் படிப்பு பாதியில் நின்று விடுகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகம் பேர் பள்ளியில் சேராத மாணவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பள்ளி செல்லாத மாணவர்கள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் கோவை இரண்டாமிடத்தில் உள்ளது.


வேலை நிமித்தமாக கோவைக்கு வரும் வெளி மாவட்ட ஏழை தொழிலாளர்களின் மீட்கப்பட்ட குழந்தைகள், இணைப்பு மையங்கள், கோடைகால வகுப்புகள், நேரடி பள்ளி சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்(எஸ்.எஸ்.ஏ) சார்பில் இது போல் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் சேராதவர்கள் அடையாளம் காணப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 2010-2011ல் பள்ளியில் சேராத 3,600 மாணவர்களை கண்டறிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 4,273 பேர் கண்டறியப்பட்டனர்.


கடந்த ஆண்டு இறுதி வரை இவர்களில் 533 குழந்தைகளுக்கு 36 கோடைகால முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. 280 குழந்தைகள் நேரடி பள்ளி சேர்க்கையில் சேர்க்கப்பட்டனர். 150 இணைப்பு மையங்களில் 2,192 மாணவர்கள் தற்போது சேர்ந்து படிக்கின்றனர். 16 வள மையங்கள் வாயிலாக 732 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.


அவசியம் அனைவருக்கும் கல்வி: கோவையில் வெளி மாவட்டக் குழந்தைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்படுவது போல், பிற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். பெற்றோரின் பணி முடிந்து வேறு ஊருக்கோ, சொந்த ஊருக்கோ செல்லும்போது குழந்தைகளின் படிப்பு மீண்டும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, முறையான சான்றிதழ் வழங்கி அடுத்த ஊரில் உள்ள பள்ளியில் கொடுத்து படிப்பை தொடரும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்.


ஊர் விட்டு ஊர் செல்லும் இக்குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க, இவர்களைப் பற்றிய தகவல்களை தயாரித்து ‘நெட்வொர்க்கிங்’ முறையில் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் செல்லுமிடங்களிலும் படிப்பை தொடர்வது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, அரசின் அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் குறிக்கோள் நிறைவேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us