தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஏ.ஓ., தேர்வு எழுதுவோர்களுக்கான ஆலோசனைகள்

வி.ஏ.ஓ., தேர்வு எழுதுவோர்களுக்கான ஆலோசனைகள்

வி.ஏ.ஓ., தேர்வு எழுதுவோர்களுக்கான ஆலோசனைகள்


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வை எப்படி எதிர்கொள்வது என போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும், மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் பெ. வெங்கடாசலம் கூறியதாவது:


தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை ‘ரிவிஷன்’ செய்தாலே போதும். குறிப்பாக, வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை மற்றும் முக்கிய ஆண்டுகளையும், இயற்பியல்பகுதியில் அலகுகள், விதிகள், அறிவியல் மதிப்புகள், வேதியியல் பகுதியில் வேதிப்பெயர்கள், சமன்பாடுகள், கண்டுபிடிப்பாளர்கள், தாவரவியலில் தாவரப்பெயர்கள், நன்மைகள், மனித உடலியலில் வைட்டமின்கள்,நோய்கள் குறித்து படிக்கவும்.


கணிதப் பாடத்தில் உள்ள சூத்திரங்களை ஒருமுறை எழுதிப் படிக்கவும். அரசியல் அறிவியலில் ஷரத்துகள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றையும், பொருளாதாரத்தில் அரசுத்திட்டங்கள், பொருளாதார கமிட்டிகள், வங்கித்துறை தொடர்பாகவும் படிக்கவும். பொதுவான செய்திகளில், நடப்புச் செய்திகள், நூல் மற்றும் நூலாசிரியர்கள், சென்சஸ், விண்வெளி, பாதுகாப்புத்துறை, சர்வதேச அமைப்புகள், முக்கிய தினங்கள், விளையாட்டு செய்திகள் ஆகியவற்றை ஒருமுறை திருப்பிப் பார்க்கவும். இதேபோன்று, தமிழ் பாடத்தில் நூல் மற்றும் நூலாசிரியர்கள், நூல்களின் சிறப்பு பெயர்கள், இலக்கணக்குறிப்பு, ஓரெழுத்து ஒரு மொழி ஆகியவற்றை திரும்பிப் பார்க்கவும்.


தேர்வுக்கு செல்லும் முன் சரிபார்க்க
*ஹால் டிக்கெட் எடுத்துச் செல்லவும்.
* நீலம் அல்லது கருமை நிற மை கொண்ட ‘பால் பாயின்ட் பேனா’ மூன்று அல்லது நான்கு எடுத்துச் செல்லவும்.
* தேர்வு மையத்திற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பாகவே சென்றால், கடைசி நேரபதட்டத்தை தவிர்க்கலாம்.
* மொபைல் போன், கால்குலேட்டர் எடுத்துச் செல்லக் கூடாது.
* கைக்கடிகாரம் அணிந்துச் செல்வதால்,அடிக்கடி நேரத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.
*தேர்வுக்கு முதல் நாள் இரவு, நன்கு தூங்கவும். சரியான தூக்கம் இல்லாமல் சென்றால், தேர்வில் யோசிக்கும் திறன் குறையும்.


தேர்வு முறை
* மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 100 பொது அறிவு, 100 பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற பகுதியில் இடம் பெறும்.
*அனைத்து கேள்விகளுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் இல்லை.
*மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும்.
*கவனச்சிதைவு இல்லாமல் முழு கவனத்துடன் கேள்விகளை படித்துப் பார்க்கவும்.
*‘என்னால் வெற்றி பெற முடியும்’ என்ற உயர்ந்த எண்ணத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை அணுகுங்கள். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 98426 34271ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us