தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரவேற்பை பெற்ற கைதிகளுக்கான தொழில் படிப்புகள்

வரவேற்பை பெற்ற கைதிகளுக்கான தொழில் படிப்புகள்

வரவேற்பை பெற்ற கைதிகளுக்கான தொழில் படிப்புகள்


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 03:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 03:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்த கம்யூனிடி கல்லூரி, தமிழகத்திலுள்ள சிறை கைதிகளுக்கு தொழில் படிப்புகளை வழங்கும் திட்டத்தை அரசுடன் சேர்ந்து ஆரம்பித்தது. மாநிலத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு திட்டம், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புழல் மத்திய சிறையில் தொடங்கப்பட்டது.


இது சம்பந்தமாக தமிழக சிறைத்துறை கூடுதல் காவல் இயக்குனர்(டி.ஜி.பி) ஜே.கே. திரிபாதி கூறுகையில், "தமிழக அரசும், தனியாரும் இணைந்து பணியாற்றும் இந்த திட்டத்தில் இதுவரை 9 மத்திய சிறைகள் மற்றும் 2 மகளிர் சிறைகளை சேர்ந்த சுமார் 228 கைதிகள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 20 பேர் பெண்கள். புழல் மற்றும் திருச்சி மகளிர் சிறைகளை சேர்ந்த அந்த 20 பெண்கள், அழகுக் கலை படிப்புகளை விரும்பி தேர்ந்தெடுத்துள்ளனர். மற்ற 208 ஆண்கள், 4 சக்கர வாகன மெக்கானிசம், டி.டி.பி. ஆபரேட்டர், கேடரிங் டெக்னாலஜி, ஹவுஸ் எலக்ட்ரீஷியன் மற்றும் கம்ப்யூட்டர் வகுப்புகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.


இந்த படிப்புகளுக்காக சேர்ந்துள்ள கைதிகள் சோதனை மற்றும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையிலிருந்து அவர்கள் விடுதலையாகும் தேதியை கவனத்தில் கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சிறையும் அந்தந்த மாவட்டத்திலுள்ள கம்யூனிடி கல்லூரியுடன் இணைக்கப்பட்டிருக்கும். கல்லூரியின் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சிறையில் 3 மணிநேரம் பாடம் நடத்துவார்கள். மேலும் மாநிலத்திலுள்ள தொழில்துறை பயிற்சி கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்களும் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.


இந்த ஒரு வருட படிப்பில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து திறன்களும் மேம்படுத்தப்படும். ஆங்கிலப் பயிற்சி, பிற தகவல்தொடர்பு திறன் பயிற்சி, அடிப்படை கணினி அறிவு மற்றும் வியாபார திறன்கள் போன்றவை கற்றுத் தரப்படும். இந்த பயிற்சியில் தியரி வகுப்புகளுடன், ஆய்வக வசதிகளும் உண்டு. மேலும் 4 சக்கர வாகன மெக்கானிசம் போன்ற பாடங்களை நடத்த, முக்கிய மோட்டார் நிறுவனங்களிலிருந்து ஆட்களை அழைத்துவரும் பொறுப்பு கம்யூனிடி கல்லூரியினுடையது.


இந்த பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் கல்வி கட்டண நிதியை மாநில அரசு வழங்கும். அதேசமயம் பாடம் எடுக்கும் நபர்களுக்கான சம்பளம் நன்கொடைகளிலிருந்து வழங்கப்படும். மேலும் அடுத்த வருடம் கேம்பஸ் இன்டர்வியூக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு குற்றவாளி விடுதலையாகும்போது, அவர் தனது வாழ்வாதாரத்திற்கான வேலையை உடனே பெற முடியும். இந்த தொழில் படிப்புகளுக்கு கைதிகளிடம் கிடைத்த வரவேற்பால் சிறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 வயது முதல் 47 வயது வரையான கைதிகள் இப்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்" என்றார்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us