தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விசாரணைக்கு வந்தது கல்வி உரிமை சட்ட வழக்கு

விசாரணைக்கு வந்தது கல்வி உரிமை சட்ட வழக்கு

விசாரணைக்கு வந்தது கல்வி உரிமை சட்ட வழக்கு


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு


கல்வி உரிமை சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை மற்றும் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தொடங்கி விட்டது.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய கல்வி தரப்பட வேண்டுமென்ற கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளில், சமூகத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு சுமார் 25% இடங்களை ஒதுக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, உத்திரப்பிரதேச மாநிலத்தின் சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் கர்நாடகத்தின் சில அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதையடுத்து இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த சட்டமானது சிறுபான்மை மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாக உள்ளன என்று அந்த கல்வி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us