தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை இந்தியா அபகரிக்கவில்லை

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை இந்தியா அபகரிக்கவில்லை

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை இந்தியா அபகரிக்கவில்லை


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்யப்படுவது பற்றி பெரியளவில் மிகைப்படுத்தி கூறப்படுகிறது என்று ஒபாமா நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க வேலை வாய்ப்புகள் இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யப்படுவது பற்றி அதிகளவிலான மிகைப்படுத்தல்கள் செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் இந்தியாவிற்கு செல்வதுபோல் சொல்லப்படுகின்றன. ஆனால் வர்த்தகம் என்பது இரு தரப்புகள் சம்பந்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


பல இந்திய கம்பெனிகள் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளன. அதன்மூலம் பல அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்ற வணிக அம்சங்கள் இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட விஷயம். இந்திய வணிகத்தன்மையானது வேறு பல நாடுகளைப் போல் இல்லாமல் சமநிலைத் தன்மை உடையது.


மேலும் அமெரிக்காவிலிருந்து செய்யப்படும் இறக்குமதியை இந்தியா 17% அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்க வேலை வாய்ப்புகள் வெகு சாதாரணமாக இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன என்ற மிகைப்படுத்தல்களை நம்பத் தேவையில்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us