தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி


UPDATED : பிப் 20, 2011 12:00 AM

ADDED : பிப் 20, 2011 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2011 12:00 AM ADDED : பிப் 20, 2011 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான வேறுபாடுகளை களைய, அனைத்து மாநில அரசுகளுடனும் தொடர்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன் மற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பாக இதை தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக விவாதித்து எடுக்கப்படும் முடிவுகளை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க நீதிபதிகள் கால அவகாசம் அளித்தனர்.


மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான மாணவர்களை சேர்க்க, நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டது நமக்கு நினைவிருக்கலாம். மேலும் இதுசம்பந்தமான செயல்பாட்டில் இறங்க, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(எம்.சி.ஐ) உச்சநீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. ஆனால் இந்த முயற்சியை எதிர்த்து பல மாநில அரசுகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகள் போன்றவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.


எனவே எம்.சி.ஐ. நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தாலும், ஆட்சேபம் தெரிவிப்பவர்களின் கருத்தை அறிய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மாணவர்களின் வாழ்க்கை விஷயத்தில் எச்சரிக்கையாக செயல்ப்படும்படியும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன என்பது நினைவுகூறத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us