தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க தனியாருக்கு அழைப்பு

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க தனியாருக்கு அழைப்பு

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க தனியாருக்கு அழைப்பு


UPDATED : பிப் 21, 2011 12:00 AM

ADDED : பிப் 21, 2011 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2011 12:00 AM ADDED : பிப் 21, 2011 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க விரும்புவோர், பாடப் புத்தகங்களின் நகல்களை, ஏப்ரல் ஐந்தாம் தேதிக்குள் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், என வாரியத்தின் தலைவர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.


மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் தலைவரும், பள்ளிக்கல்வி இயக்குனருமான பெருமாள்சாமி, நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட பாடங்கள் தவிர்த்து (ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு), பிற வகுப்புகளுக்கான பாடத் திட்டம், வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில், இரண்டு முதல் ஐந்தாம் வகுப்புகள் வரையும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகள் வரையும் தமிழ் பாடம் தவிர்த்து, இதர பாடங்களுக்கு பாடப் புத்தகங்களை தயார் செய்ய விரும்புவோர் (தனியார் பதிப்பகத்தினர்), பொதுப்பள்ளி கல்வி வாரியம் நிர்ணயித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பாடப் புத்தகங்களின் மூன்று நகல்களை, வாரியத்தின் உறுப்பினர் - செயலருக்கு, ஏப்ரல் ஐந்தாம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


ஒவ்வொரு பாடப் புத்தகத்திற்கும், தோராய விலையை குறிப்பிட வேண்டும். ஏப்ரல் ஐந்தாம் தேதிக்குள், "உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (இடை நிலைக்கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு, புத்தகங்களின் நகல்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும். பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, வாரியத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு பெருமாள்சாமி கூறியுள்ளார். பத்தாம் வகுப்புக்கு, இது வரை ஒவ்வொரு கல்வி திட்டத்திற்கும் தனித்தனியாக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.


வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பும், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் வருவதால், அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேவைப்படும் ஒரே மாதிரியான பாடப் புத்தகங்களை தமிழக அரசு மட்டுமே தயாரிக்கும் என்றும், அதில் தனியார் பதிப்பகத்தினர் அனுமதிப்பதில்லை என்றும், தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை தயாரிக்க, தனியார் பதிப்பகங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கவில்லை. பிற வகுப்புகளுக்கு மட்டும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us