UPDATED : பிப் 22, 2011 12:00 AM
ADDED : பிப் 22, 2011 04:35 PM
நாட்டின் முதல் ஐ.ஐ.எம். என்ற பெருமை பெற்ற கல்கத்தா-ஐ.ஐ.எம் -இல், 50 ஆண்டு நிறைவு பொன்விழாவை முன்னிட்டு மீடியா துறையில் சிறப்பு படிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.
தற்போது மீடியாவில் பணிபுரியும் நபர்கள் படிக்கும் வகையில் ஒரு எக்சிகியூடிவ் படிப்பாகவே ஆரம்பத்தில் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுசம்பந்தமாக மீடியா துறை சார்ந்த நபர்களிடம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
தொழில்துறையின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டே இந்த படிப்பு தொடங்கப்படும். அதேசமயம் எந்தவகையான படிப்பு ஆரம்பிக்கப்படும் என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை. எனவேதான் சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதம் நடைபெற்றது. மேலும் இதுபோன்ற விவாதங்கள் டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களிலும் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த படிப்பு ஆரம்பத்தில் 3 முதல் 5 நாட்கள் கால அளவு கொண்டதாகவும், அதன்பிறகே அதன் கால அளவு நீட்டிக்கப்பட்டு ஒரு வாரம் நீடிக்கும் விரிவுரைகளில் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள். அந்த படிப்பானது செயற்கைக்கோள் அடிப்படையிலான படிப்பாகவும் இருக்கலாம். இந்த படிப்பு மட்டும் தொடங்கப்பட்டு விட்டால், இந்திய ஐ.ஐ.எம் -களிலேயே கல்கத்தா-ஐ.ஐ.எம். மட்டுமே இதுபோன்ற படிப்பை முதலில் அறிமுகப்படுத்திய பெருமை பெறும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
