தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/44 நிகர்நிலை பல்கலை விஷயத்தில் தனி செயல் கமிட்டி

44 நிகர்நிலை பல்கலை விஷயத்தில் தனி செயல் கமிட்டி

44 நிகர்நிலை பல்கலை விஷயத்தில் தனி செயல் கமிட்டி


UPDATED : பிப் 24, 2011 12:00 AM

ADDED : பிப் 24, 2011 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2011 12:00 AM ADDED : பிப் 24, 2011 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு


தகுதி நீக்கத்திற்கு உள்ளான 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் விண்ணப்பங்களை ஆய்வுசெய்ய, ஒரு தனி செயல் கமிட்டியை மனிதவள அமைச்சகம் நியமித்துள்ளது.


நாட்டிலுள்ள

நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மதிப்பாய்வு செய்ய கடந்த 2009, ஜூன் 7 ம் தேதி ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்தக் குழுவானது, அதே ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. அதில் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற 44 கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான வசதிகளை வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அந்த கல்வி நிறுவனங்களுக்கு தங்களின் குறைகளை சரிசெய்ய 3 வருடங்கள் அவகாசம் தரப்பட்டது போன்ற அனைத்தும் நம் நினைவில் நிற்கும் கடந்தகால நிகழ்வுகள்.


அந்த

குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைகளை சரிசெய்துள்ளதாக கூறும் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வுசெய்ய இந்த செயல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் செயல் கமிட்டி கண்டறியும் உண்மையாக படம் பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். மேலும் மனிதவளத் துறை இணையதளத்தில் அந்த விவரங்கள் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us