தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஐ.ஐ.எம். மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு


UPDATED : பிப் 25, 2011 12:00 AM

ADDED : பிப் 25, 2011 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2011 12:00 AM ADDED : பிப் 25, 2011 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஆனால் மனிதவளத் துறை மற்றும் 11 ..எம் -களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது நாட்டில் 11 ..எம் -கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மாணவர் சேர்க்கை பொதுவாக கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நடந்தாலும், ஒவ்வொரு ..எம். அட்மிஷன் கமிட்டியும் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதனால் ..எம் -களில் சேர்வதற்கு விருப்பம் கொண்ட மாணவர்கள் குழப்பம் அடைகிறார்கள்.


எனவே ..எம். சேர்க்கை நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். அதில் அவர்கள், ..எம் -களின் சேர்க்கை நடைமுறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டும், குழப்பமாகவும் உள்ளன. சிலர் கேட் தேர்வில் 99% மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரவில்லை. சில ..எம் -கள் பள்ளி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுக்கின்றன.


எனவே இவற்றில் ஒரு பொதுவான வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதன்பொருட்டு இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் 2010 கேட் தேர்வை நிறுத்தி வைப்பதோடு, ..எம் -களின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தங்களின் மனுவில் கோரியிருந்தனர்.


ஆனால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், மனிதவளத் துறை மற்றும் நாட்டின் 11 ..எம் -கள் ஆகியவற்றிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதற்கான பதிலை வரும் ஏப்ரல் 18 ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கும் நீதிமன்றம், அந்த தேதியிலேயே அடுத்தகட்ட விசாரணையையும் நடத்த உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us