தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயோ டெக்னாலஜி துறையில் 50 நுண்ணறிவு மையங்கள்

பயோ டெக்னாலஜி துறையில் 50 நுண்ணறிவு மையங்கள்

பயோ டெக்னாலஜி துறையில் 50 நுண்ணறிவு மையங்கள்


UPDATED : பிப் 25, 2011 12:00 AM

ADDED : பிப் 25, 2011 04:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2011 12:00 AM ADDED : பிப் 25, 2011 04:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த நாடு முழுவதும் பயோடெக்னாலஜி நுண்ணறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.


லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவன் குமார் பன்சால் இதை தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, "பலவித அறிவியல் துறைகளுக்கு இடையே நுண்ணறிவை மேம்படுத்தவும், பயோடெக்னாலஜியின் குறிப்பிட்ட பிரிவுகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் நுண்ணறிவு மையங்களை ஏற்படுத்த பயோடெக்னாலஜி துறை திட்டமிட்டுள்ளது" என்றார்.


இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 50 நுண்ணறிவு மையங்களை அமைக்க பயோடெக்னாலஜி துறை திட்டமிட்டுள்ளது. இந்த நுண்ணறிவு மையங்கள் ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தி அதிகரிக்க உதவுவதோடு, கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி கட்டமைப்பையும் வலுவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us