UPDATED : பிப் 26, 2011 12:00 AM
ADDED : பிப் 26, 2011 03:44 PM
கவுன்சில் பார் இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்சாமினேஷன்(சி.ஐ.எஸ்.சி.இ) நடத்தும் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான ஐ.சி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ். தேர்வுகள் திங்கட்கிழமை தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் 1 மாதத்திற்கும் மேலாக நடைபெறும்.
இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளிலிருந்து சுமார் 1,81,004 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகிறார்கள். தற்போது சி.ஐ.எஸ்.சி.இ. வாரியத்தில் 1,634 மேல்நிலைப் பள்ளிகளும், 761 உயர்நிலைப் பள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் யு.ஏ.இ. போன்ற சில வெளிநாடுகளிலும் சி.ஐ.எஸ்.சி.இ. வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 ம் தேதி முடிவடையும் நிலையில், 12 ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31 தேதி நிறைவடைகின்றன.
