தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12 ம் வகுப்பு தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்கள்

12 ம் வகுப்பு தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்கள்

12 ம் வகுப்பு தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்கள்


UPDATED : பிப் 27, 2011 12:00 AM

ADDED : பிப் 27, 2011 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2011 12:00 AM ADDED : பிப் 27, 2011 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு


முதுகலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒட்டி, 12 ம் வகுப்பு தேர்வுகளை முறையாக நடத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில்

, 12 ம் வகுப்பு தேர்வு நெருங்கியுள்ள நிலையில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் 12 ம் வகுப்பு தேர்வு நடத்துவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, பட்டதாரி ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தமிழ்நாடு

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்த, "ஜேக்" அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்தல், 12 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பிடும் பணிக்கான ஊதியம், விடைத்தாள் ஒன்றுக்கு 5 ரூபாயிலிருந்து, 10 ரூபாயாக அதிகரித்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. பிப். 26, 27 ம் தேதிகளில் மறியல் போராட்டமும், பிப். 28ம் தேதி முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில்

, 12 ம் வகுப்பு தேர்வு, மார்ச் 2 ம் தேதியன்று தமிழகம் முழுவதும் துவங்க உள்ளது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர். நேற்று முன்தினம் சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த தேர்வுப்பணி ஆலோசனைக் கூட்டத்திலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர். மேலும் பிப். 28ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்வதிலும் தீவிரமாக உள்ளனர். இதனால் 12 ம் வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us