UPDATED : பிப் 27, 2011 12:00 AM
ADDED : பிப் 27, 2011 12:37 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பி.இ., எம்.பி.பி.எஸ்., தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.
பி.இ., பி.எஸ்சி., (விவசாயம், தோட்டக்கலை) நுழைவு தேர்வு விண்ணப்பம் ரூ.400, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்சி-நர்சிங், பி.பார்மசி பாடப் பிரிவிற்கு விண்ணப்பம் ரூ.300.
வரும் மார்ச் 23 ம் தேதி வரை விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி மார்ச் 31. விண்ணப்பங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
