UPDATED : பிப் 27, 2011 12:00 AM
ADDED : பிப் 27, 2011 01:01 PM
அ நிறம் | அளவு
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற உயர்த்தப்பட்ட வருமான வரம்பை கவனத்தில் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதிதிராவிட மாணவ, மாணவியர் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற அவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பு இதுவரை ஒரு லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது கடந்த ஆண்டு ஜூலை முதல் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வரும் 2010-11 ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெற விரும்புகிறவர்கள், உயர்த்தப்பட்ட ஆண்டு வருவாயை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
