UPDATED : பிப் 27, 2011 12:00 AM
ADDED : பிப் 27, 2011 01:56 PM
தேசிய தொழில்முறை கல்வி தகுதிகள் வரையறையை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஜூலை 31 -இல் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.
மேலும் அந்த குழுவானது அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான செயல்முறையையும் தயாரிக்கிறது. அந்த குழுவில் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஷ்கர், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மனிதவளத் துறையை சேர்ந்த 10 மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு, அறிக்கையை தயாரிப்பதில் ஒத்துழைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக் குழு தனது வரைவை அமைச்சர்கள் குழுவிடம் வரும் மே 31 ம் தேதியன்று அளிக்கும். அமைச்சர்கள் குழு தயாரிக்கும் வரையறையானது, திறன் அடிப்படையிலான பகுதிகளைக் கொண்டதாகவும், பாடப் பகுதிகளின் திரட்டு மற்றும் மாற்றங்களைக் கொண்ட பிரிவுடனும் இருக்கும். மேலும் செக்டார் ஸ்கில் கவுன்சில்களுடன் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.
