UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 12:14 PM
ஐ.ஐ.டி., கான்பூர் கல்விநிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் "எஸ்.யூ26&' என்ற விமானத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கு முன், எந்த கல்வி நிறுவனமும் இத்தகைய பெரிய ரக விமான கட்டமைப்பில் ஈடுபட்டதில்லை.
இந்த விமானத்தின் பாகங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இவை அனைத்தையும் ஐ.ஐ.டி., கான்பூர் மாணவர்கள் திறம்பட ஒருங்கிணைத்து விமானத்திற்கு முழுவடிவம் கொடுத்துள்ளனர். இந்த விமானத்தை "ரிமோட்&' மூலம் இயக்க முடியும். இதனுடைய "இன்ஜின்&' திறன் 57 சிசி கொள்ளளவு உடையது.
இந்த விமானம் "ஹெலிகாப்டர்&' போன்று வானில் நிலைத்து நின்று வட்டமிட்டு பறக்கும் ஆற்றல்பெற்றது. இது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது. இந்த விமானத்தை கட்டமைக்க ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. இத்தொகையில் "ரிமோட்&' தயாரித்தற்கான கட்டணமும் அடங்கும். விமானத்தை, ஐ.ஐ.டி.,கான்பூர் வளாகத்தில் நடைபெற்ற "டெக் கிரிட்டி 2011&' என்ற போட்டிக்காக மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.
