பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்
பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்
UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 06:36 PM
* தேர்வுக்கு செல்லும் முன்பே, தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், அமைதியாகவும், பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தேர்வு துவங்கும் கடைசி நேரம்வரை அவசர அவசரமாக பதட்டத்துடன் படித்துக்கொண்டு இருக்காதீர்கள். குறிப்பாக புதிதாக எந்த பாடத்தையும் படிக்க வேண்டாம்.
* தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகு, ஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
* கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப் பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும்போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதி, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை.
* இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால், எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். தேர்வுக்கு முன்பாக அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்தல் நல்லது. விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாக, உங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களா? என்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* மாணவர்கள் தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்க கூடாது. எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அதிஷ்டத்தை நம்பாமல், உழைப்பையும், திறமையையும் நம்புங்கள். அதிக மதிப்பெண்களை குவிக்க முடியும்.
பிளஸ்
2 தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் நன்றாக செயல்பட்டு, அதிக மதிப்பெண்களைப் பெற்று, வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள கல்விமலர் இணையதளம் மனதார வாழ்த்துகிறது.
