தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை?

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை?

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை?


UPDATED : மார் 02, 2011 12:00 AM

ADDED : மார் 02, 2011 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2011 12:00 AM ADDED : மார் 02, 2011 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.


* மாணவர் தன்னிடம் உள்ள துண்டுச் சீட்டு, புத்தகங்களை தாமாக முன்வந்து கண்காணிப்பாளரிடம் தந்தால், தலைமை கண்காணிப்பாளர் ஒரு முறை எச்சரித்து விடலாம். அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றலாம்.
* தடை செய்யப்பட்ட தேர்வு பொருட்கள் இருப்பதை கண்காணிப்பாளர் கண்டறிந்தால், எழுத்துப்பூர்வமான விளக்கம் பெற்ற பின், மாணவர், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார்.
* "காப்பி'யடித்தால், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார். ஓர் ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது.
* பிட் அடித்து பிடிபட்டால், அந்த தேர்வு மார்க் ரத்து செய்யப்படும். இருமுறை தேர்வு எழுத அனுமதியில்லை
* மாணவர் மற்றும் அவரை சார்ந்தவர் கண்காணிப்பாளரை தவறான நோக்கில் அணுகினால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை.
* ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து மற்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
* விடைத்தாளில் தேவையற்ற வார்த்தை எழுதுதல், இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுதல் போன்ற குற்றங்களுக்கு, குறிப்பிட்ட பாடம் மற்றும் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படும்.
* கண்காணிப்பாளருடன் அறைக்குள்ளும், வெளியேயும் தகராறு செய்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத முடியாது.
* தேர்வு நேரத்தில் அறைக்கு வெளியே வினாத்தாளை தந்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை.
* பிடிபட்ட பின் தலைமை கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமலிருந்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத அனுமதி கிடையாது.
* விடைத்தாளுக்குள் பிட் இருப்பது திருத்தும் போது தெரிய வந்தால், தேர்வு ரத்து.
* மற்றொரு மாணவரின் விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை.
* விடைத்தாளில் பெயர், இன்ஷியல், வேறு குறியீடு எழுதினால், மாணவரிடம் எழுதி வாங்கிய பின் மன்னிப்பு, அல்லது அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.
*தேர்வு அறைக்குள் வினாத்தாளை அடுத்தவர் மீது வீசினால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.


ஆசிரியருக்கும் தண்டனை: பிட் அடிக்கும் மாணவனுக்கு மட்டுமின்றி, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியருக்கும் இனி தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு அறையில் மாணவன் பிட் அடிப்பது கண்டறியப்பட்டால், அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர் மீது, "17ஏ, 17பி' பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us