UPDATED : மார் 03, 2011 12:00 AM
ADDED : மார் 03, 2011 04:58 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகரின் பதவிக் காலத்தை, மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலையில் பேராசிரியராக இருந்த மன்னர் ஜவகர், 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அதே பல்கலையின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக் காலம், வரும் ஜூன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், துணைவேந்தரின் பதவிக் காலத்தை, மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து, கவர்னர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார். புதிய உத்தரவு, ஜூன் 27ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
