UPDATED : மார் 03, 2011 12:00 AM
ADDED : மார் 03, 2011 04:58 PM
சேலம்: தமிழகத்தில் உள்ள ஐந்து மருத்துவக் கல்லூரிகளின் டீன் பதவிக்கு புதிய டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் கனகசபை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிசங்கர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சிறப்பு அதிகாரி டாக்டர் கீதாலெட்சுமி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜரத்தினம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரவிசங்கர், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டீன்கள், நேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய பணி இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
