தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி: அரசு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு
தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி: அரசு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு
UPDATED : ஆக 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகஸ்ட் 8ம் தேதி காலை 10.30 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர்.
நெல்லை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவரும் சட்டக்கல்லூரி மாணவருமான காமராஜ் தலைமையில் கல்லூரிக்கு முன்பாக நெல்லை-தூத்துக்குடி ரோட்டில் திடீரென படுத்து உருண்டு மறியலில் ஈடுபட்டனர். மின்சார கம்பம் ஒன்றை நடுரோட்டில் எடுத்துபோட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த இரண்டு போலீசார் உயர்அதிகாரிகளுக்கு தகவல் கூறினர். பாளை., உதவிகமிஷனர் முருகேசன் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாணவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாய்த்தகராறுடன் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. எனவே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓடிச்சென்று அங்கிருந்து கற்களையும், மரக்கட்டைகளையும் எடுத்து போலீசார் மீது வீசினர். எனவே போலீசாரும் கல்லூரி வளாகத்திற்குள் சென்று மாணவர்களை அடித்துவிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் தாக்கியதில் மாணவர்கள் ஜெய்சங்கர், ராஜ்குமார், கண்ணன், குமரகுருபரன், செல்லத்துரை, நந்தகுமார்,அகிலன், செல்வம் உள்ளிட்டோர் காயமுற்றனர்.
மாணவர்கள் கல்வீசியதில் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ஜீவராஜ், போலீசார்அந்தோணி உள்ளிட்ட இருதரப்பினரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் சட்டக்கல்லூரி முன்பாக உருவபொம்மை எரிப்பு போராட்டத்தையும் நடத்தினர். தடியடி பிரச்னையால் சட்டக்கல்லூரிக்கு ஒரு நாள் விடுப்பு விடப்பட்டது. அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

