பார்வையற்ற மாணவி உட்பட 70 பேர் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வில் வெற்றி
பார்வையற்ற மாணவி உட்பட 70 பேர் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வில் வெற்றி
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 02:44 PM
இதில், ஜெ.சுஜிதா என்ற கண் பார்வை இழந்த மாணவி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கண் தெரியாத ஒருவர், தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. அவருக்கு ஐ.எப்.எஸ்.(இந்திய வெளியுறவு பணி) அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக முதன்மைத் தேர்வு எழுதிய உடனேயே நேர்முகத் தேர்விற்கான பயிற்சி இந்த மையத்தில் நவம்பர் மாதத்திலேயே துவங்கப்பட்டது. பயிற்சிபெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, தனித்தனி செய்தித்தாள்கள், யோகா பயிற்சி வகுப்புகள், போதுமான பாடப் புத்தகங்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்தையும் அறக்கட்டளையே இலவசமாக செய்து கொடுத்தது.
தொடர்ந்து, நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில், ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டில்லிக்கு நேரில் அழைத்துச் சென்று அதிகபட்சமாக ஒரு மாத காலம் தங்குவதற்கும், உணவு மற்றும் வகுப்புகள் அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், தக்க சான்றிதழ்களுடன் மையத்தில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை மார்ச் 4 ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம் எனவும் இம்மைய இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்தார். ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி, நிர்வாகிகள் மல்லிகா துரைசாமி மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
