UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 12:50 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (பருவமுறை சி.பி.சி.எஸ்.,) நவம்பர் 2010 தேர்வு மறுமதிப்பீட்டு முடிவுகள் கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பி.ஏ.,- பி.பி.ஏ.,- பி.எஸ்.சி.,- பி.காம்.,- எம்.சி.ஏ.,-எம்.எஸ்.சி., (பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு). முடிவுகளை ( www.mkuniversity.org ). இன்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பழைய மதிப்பெண் பட்டியலை, இன்டர்நெட் மூலம் எடுக்கப்பட்ட மறுமதிப்பீட்டு முடிவு நகலுடன் இணைத்து கல்லூரி முதல்வர்களிடம் ஒப்படைக்க வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என தேர்வாணையர் ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.
