ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலை கையெழுத்திட்டது
ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலை கையெழுத்திட்டது
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 02:43 PM
பாரத் கல்வி மற்றம் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 8 பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மன்னார் ஜவஹரும், பாரத் கல்வி மற்றம் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஇஆர்எப்) நிர்வாக பொறுப்பாளர் ஆர். இம்மானுவலும் கையெழுத்திட்டனர்.
மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ-மெடிக்கல் இஞ்ஜினியரிங், மெடிக்கல் பிசிக்ஸ், பயோடெக்னாலஜி, பயோ மெடிக்கல் நானோ டெக்னாலஜி, பயோ-நானோ மெட்டீரியல்ஸ், மெடிக்கல் இமேஜிங் மற்றும் ஸ்டான்டர்ட்ஸ் ஆகிய 8 துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த துறைகளில் பட்டப்படிப்புகளை ஊக்குவிப்பது, பயிற்சிகள் அளிப்பது, பயிற்சிக் கூடங்களை அமைப்பது, பேராசிரியர்களை பாடம் நடத்துவதற்கும், தேர்வின் போதும் பரிமாறிக் கொள்வது போன்ற பல விஷயங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
