UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 03:22 PM
நெட் தேர்வு எழுதுபவர்கள் பற்றிய விவரங்களை(புகைப்படம் உட்பட) ஆன்லைனிலேயே பெறும் முறையை யு.ஜி.சி. தொடங்கியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இ-சான்றிதழ் வழங்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும். இதுபோன்று இ-சான்றிதழ் வழங்குவதால், சான்றிதழ் வழங்கும் காலமானது, 6 முதல் 8 மாதங்கள் என்பதிலிருந்து 6 நாட்களாக குறையும்.
மேலும் ஒரு நெட் சான்றிதழ் உண்மையானதுதானா? என்பதை சரிபார்ப்பதற்கு முன்பு 4 மாதங்கள் ஆனது. ஆனால் தற்போது அதற்கு 24 மணி நேரங்கள் மட்டுமே ஆகும். இந்த நிகழ்ச்சியில் யு.ஜி.சி. திட்டங்கள் அடங்கிய ஒரு தொகுப்பும் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பில் யு.ஜி.சி -இன் 63 திட்டங்கள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. யு.ஜி.சி. மூலம் நிதியுதவி பெறுவது உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டங்களில் அடங்கும்.
நெட் தேர்வானது 77 பாடங்களில் நாடுமுழுவதும் 74 மையங்களில் நடத்தப்படுகிறது. கடந்த 2010 ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வில்(ஜே.ஆர்.எப். உட்பட) மொத்தம் 10,433 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
