தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி -களில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கூடாதா?

ஐ.ஐ.டி -களில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கூடாதா?

ஐ.ஐ.டி -களில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கூடாதா?


UPDATED : மார் 04, 2011 12:00 AM

ADDED : மார் 04, 2011 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2011 12:00 AM ADDED : மார் 04, 2011 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

..டி. நுழைவுத்தேர்வுக்கான பாட உபகரணங்கள் இந்தி மொழியில் கிடைக்காததால், வட இந்திய கிராமப்புற மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று உறுப்பினர் ஒருவர் ராஜ்யசபாவில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மனிதவளத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, "ஆங்கிலம் என்பது ஒரு சர்வதேச மொழி. எனவே ஒவ்வொரு மாணவரும் அதில் புலமைபெற்ற வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.


ஆனால் அமைச்சரின் இந்த பதிலால் கோபமடைந்த, பல கட்சிகளை சேர்ந்த வட இந்திய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேசிய மொழியான இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த வட இந்திய உறுப்பினர்கள் கோரினர். அதேசமயம் தி.மு.. மற்றும் .தி.மு.. உறுப்பினர்கள் தமிழ் உள்ளிட்ட முக்கியமான பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் ராஜ்யசபாவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


அப்போது குறுக்கிட்ட மனிதவள அமைச்சர் கபில் சிபல், "..டி. என்பது ஒரு சுயாட்சி நிறுவனம். எந்த மொழியில் தேர்வு நடத்த வேண்டும் மற்றும் எந்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது அதன் தனிப்பட்ட உரிமை" என்று பதிலளித்தார். ஆனால் இந்த பதிலால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us