தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ட்ரை-வேலி இந்திய மாணவர்களுக்கு ஒத்துழைக்க அமெரிக்கா இணக்கம்

ட்ரை-வேலி இந்திய மாணவர்களுக்கு ஒத்துழைக்க அமெரிக்கா இணக்கம்

ட்ரை-வேலி இந்திய மாணவர்களுக்கு ஒத்துழைக்க அமெரிக்கா இணக்கம்


UPDATED : மார் 04, 2011 12:00 AM

ADDED : மார் 04, 2011 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2011 12:00 AM ADDED : மார் 04, 2011 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு


அமெரிக்காவின் ட்ரை-வேலி பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் விஷயத்தில் விரைவில் ஒரு தீர்வு காண, இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.


அமெரிக்காவில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட ட்ரை-வேலி பல்கலையில் படிக்க சென்ற நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய அரசாங்கம் பலவகைகளில் முயற்சி செய்தது. அதற்கு தற்போது ஓரளவு பலன் கிடைத்துள்ளது.


அமெரிக்காவிற்கான இந்திய தூதர் மீரா ஷங்கர், சில ட்ரை-வேலி மாணவர்கள் அடங்கிய குழு மற்றும் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை மற்றும் மாணவர் பரிமாற்ற விசிட்டர் திட்ட துறைகளின் பிரதிநிதிகளுக்கிடையே நடந்த சந்திப்பில் இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us