பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான பயிற்சி
பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கான பயிற்சி
UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 06:03 PM
மென்திறன் பயிற்சியாளரான டேலன்ட்ஸ்பிரின்ட் நிறுவனம், பொறியியல் மாணவர்கள் வேலை பெறுவதற்கு உதவும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன்(என்.எஸ்.டி.சி) ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
நாட்டில் ஒரு வருடத்திற்கு 3 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பு முடித்து வெளிவந்தாலும், அவர்களில் 80% மாணவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்த ஒத்துழைப்பின் மூலம் டேலன்ட்ஸ்பிரின்ட் ரூ.10 கோடியை கடனாகப் பெற்று, நகர்ப் புறங்களில் 15 பயிற்சி மையங்களையும், கிராமப்புறங்களில் 13 பயிற்சி மையங்களையும் திறந்து, பொறியியல் படிப்பு முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும். இந்த முயற்சியில் என்.எஸ்.டி.சி. 6% பங்கெடுத்துக் கொள்ளும்.
சென்னையில் அமையும் பயிற்சி மையத்தில் வருடத்திற்கு 1000 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள். மேலும் அடுத்த 10 வருடங்களில் இந்த ஒத்துழைப்பின் கீழ் மொத்தம் 5 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
