தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவரை பட்டமேற்படிப்பில் சேர்க்க எய்ம்ஸிற்கு நீதிமன்றம் அறிவுரை

மருத்துவரை பட்டமேற்படிப்பில் சேர்க்க எய்ம்ஸிற்கு நீதிமன்றம் அறிவுரை

மருத்துவரை பட்டமேற்படிப்பில் சேர்க்க எய்ம்ஸிற்கு நீதிமன்றம் அறிவுரை


UPDATED : மார் 05, 2011 12:00 AM

ADDED : மார் 05, 2011 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2011 12:00 AM ADDED : மார் 05, 2011 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுன்சிலிங்கிற்கு சற்று தினங்களுக்கு முன்பு தகவல் புத்தகம் மாற்றப்பட்டதைக் காரணமாகக் கூறி, இந்த ஆண்டு பட்ட மேற்படிப்பில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மருத்துவருக்கு சேர்க்கை இடம் ஒதுக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


முதன்மை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அளித்த தீர்ப்பில், வரும் ஜூலை 2011 கல்வி ஆண்டில் வருண் அகர்வாலுக்கு பட்டமேற்படிப்பில் இடம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


கவுன்சிலிங் நடைபெறுவதற்கு சற்று தினங்களுக்கு முன்பு தகவல் புத்தகம் மாற்றப்பட்ட விஷயத்தை கவனிக்காமல் விட்டதைக் காரணம் காட்டி, எம்.எஸ். படிப்பில் சேர அகர்வாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவர் ரேங்க் பட்டியலில் 179வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து அகர்வால் தொடுத்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், எய்ம்ஸ்ஸிற்கு தங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்ள முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் தற்போது செய்திருப்பது சரியான முறை அல்ல. எம்ய்ஸ் நிர்வாகம் செய்திருக்கும் இந்த செயலுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது.


நம்பிக்கை மற்றும் ஆர்வத்துடன் மெரிட்டில் வரும் மாணவரை சேர்ப்பதில், இதுபோன்ற ஒரு காரணத்தைக் கூறி மறுப்பது சரியல்ல என்று கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us