தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள்

இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள்

இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள்


UPDATED : மார் 05, 2011 12:00 AM

ADDED : மார் 05, 2011 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2011 12:00 AM ADDED : மார் 05, 2011 03:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவக் கல்விக்கு மேலும் வலுவூட்டும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கவும், அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.


ரூ.1,350 கோடி அளவிற்கு மருத்துவக் கல்விக்கு வலுவூட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 4,000 சேர்க்கை இடங்களை அதிகரித்து, அதன் மூலம் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.


அதேப்போன்று, 269 நர்சிங் கல்லூரிகளும் புதிதாக துவக்கப்படும். தொற்றும் வியாதிகளைத் தடுக்க மத்திய அரசு எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.


மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய குலாம் நபி ஆசாத் இதனைத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us