UPDATED : மார் 05, 2011 12:00 AM
ADDED : மார் 05, 2011 04:21 PM
அ நிறம் | அளவு
லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்கள், கேட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி சுற்றுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வழிகாட்டு திட்டமான "இக்னிஷியன் 2011"ன் 4வது பதிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த பதிப்பு குறித்து ஐஐஎம்-எல் மாணவர்கள் தெரிவிக்கையில், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு குழு கலந்துரையாடல் அல்லது நேர்முகத் தேர்வு குறித்து எளிதாக அறியும் வகையிலான தகவல்கள் யூ-டுயூப் இணையத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினர்.
