தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10 ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

10 ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்

10 ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்


UPDATED : மார் 06, 2011 12:00 AM

ADDED : மார் 06, 2011 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2011 12:00 AM ADDED : மார் 06, 2011 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பத்தாம் வகுப்பு, .எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கப்படுகிறது.


அரசு

தேர்வுகள் மதுரை மண்டல துணை இயக்குனர் பழனிச்சாமி இதுசம்பந்தமாக கூறியதாவது, பத்தாம் வகுப்பு மற்றும் .எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் வரும் 28ம் தேதி முதல் ஏப்., 11 வரை காலை 10 முதல் பகல் 12.45 மணி வரை நடக்கிறது. தனித் தேர்வர்களாக தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் அவர்களது ஹால் டிக்கெட்டை வரும் மார்ச் 9 முதல் 11 வரை ஹால் டிக்கெட் வினியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.


தேர்வர்கள்

ஹால் டிக்கெட் பெற்றவுடன் அதில் அச்சிட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவெண், தேர்வு மையம், பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நாள் போன்ற விவரங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான கருவூல வரவு சான்றிதழ் மற்றும் விண்ணப்பம் அனுப்பியதற்கான தபால் சான்றுடன், உடனே மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். ஹால் டிக்கெட் இன்றி தேர்வு எழுத இயலாது.


தேர்வெழுதும்

முதல் நாளில் தேர்வர்கள் தமது வீட்டு முகவரி எழுதி 20 ரூபாய் (மெட்ரிக் தேர்வர்கள் 30 ரூபாய்) மதிப்புள்ள தபால் வில்லைகள் ஒட்டப்பட்ட பெரிய அளவு உறை ஒன்றை தவறாமல், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹால் டிக்கெட் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. மெட்ரிக் பொதுத்தேர்வு வரும் 22 முதல் ஏப். 11 வரை நடக்கிறது. தனித் தேர்வர்களுக்கு வரும் 9 முதல் 11ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோக மையத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us