UPDATED : மார் 06, 2011 12:00 AM
ADDED : மார் 06, 2011 11:41 AM
நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்துள்ள சுவீடன் நாட்டு மாணவர்கள், தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய மாணவர்களுடன் இணைந்து எலக்ட்ரிக் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்டனர்.
சுவீடனில் எலக்ட்ரிக் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள், ஆண்டுதோறும் கூடலூர் தோட்ட தொழிலாளர்கள் தொழிற்பயிற்சி மையத்தில், இந்திய எலக்ட்ரிக் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற்று செல்கின்றனர். நடப்பாண்டுக்கான பயிற்சியில் சுவீடன் பயிற்சி மையத்தின் விரிவுரையாளர் எரிக் ஜான்சன் தலைமையில் மூன்று ஆசிரியர்கள், ஒரு மாணவி உட்பட 18 மாணவர்கள், கூடலூர் வந்துள்ளனர்.
இவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு இந்திய கலாச்சாரப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவீடன் நாட்டு பயிற்சி மைய விரிவுரையாளர் எரிக் ஜான்சன் பேசினார். இதன்பின் சுவீடன் நாட்டு மாணவர்கள் மற்றும் கூடலூர் தொழிற்பயிற்சி மாணவர்கள் இணைந்து, எலக்ட்ரீசியன் மற்றும் பிட்டர் பயிற்சி மேற்கொண்டனர். இவர்கள் வரும் 18ம் தேதி வரை இங்கு தங்கி பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இதன் துவக்க விழாவில், தொழிற்பயிற்சி முதல்வர் ஷாஜி வரவேற்றார். கூடலூர் ஊராட்சி முன்னாள் ஒன்றிய தலைவர் முகமது தலைமை வகித்தார்.
