UPDATED : மார் 06, 2011 12:00 AM
ADDED : மார் 06, 2011 05:49 PM
இந்தியாவின் முக்கிய 20 கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 300 அறிவியல் ஆர்வலர்கள், கொல்கத்தாவிலுள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனம் நடத்தும் 2 நாள்(மார்ச் 5 மற்றும் 6) அறிவியல் விழாவில் கலந்துகொண்டனர்.
"இன்குவெஸ்டா 2011" என்ற பெயரில் இந்த விழா நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து பல பிரபல கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அறிவியல் வினாடி வினா, க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன், அறிவியல் கண்காட்சி, திட்ட சவால் உள்ளிட்ட பல முக்கிய அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் இதுபோன்ற அறிவியல் விழா நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இதுபோன்ற விழாக்கள் இந்தியாவிலேயே அரிதாகத்தான் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
