UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “உலகத்தரத்துடன் கூடிய ‘வேர்ல்ட் கிளாஸ்’ பல்கலை கோவையில் அமையவுள்ளது,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கோவையில் அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் உலகத்தரத்துடன் கூடிய ஏழு ‘வேர்ல்ட் கிளாஸ்’ பல்கலைக்கழகத்தை மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பல்கலை அமைக்க, கல்வி வளம் மிக்க கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பல்கலை அமைக்க 500 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்திக் கொடுக்கும். இதற்காக ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய குழு, நிலத்தை பார்வையிட்டு முடிவு செய்தபின் நிலம் கையகப்படுத்தப்படும். வேர்ல்ட் கிளாஸ் பல்கலை அமைக்க, கோவை பாரதியார் பல்கலையில் இடமிருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளோம்.
இந்த பல்கலை ரூ.2,000 முதல் ரூ.3,000 கோடி மதிப்பில் அமையும். கோவையில் வேர்ல்ட் கிளாஸ் பல்கலை அமைக்கப்படுவதால், ஐ.ஐ.எம்., (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனம், திருச்சியில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

