தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி. மாணவர்களுக்கு ஜெர்மன்-இந்திய மேலாண்மைக் கல்வி

இன்ஜி. மாணவர்களுக்கு ஜெர்மன்-இந்திய மேலாண்மைக் கல்வி

இன்ஜி. மாணவர்களுக்கு ஜெர்மன்-இந்திய மேலாண்மைக் கல்வி


UPDATED : மார் 07, 2011 12:00 AM

ADDED : மார் 07, 2011 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2011 12:00 AM ADDED : மார் 07, 2011 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ், ஜெர்மனி பல்கலையுடன் இணைந்து இந்திய பொறியியல் மாணவர்களுக்காக ஜெர்மன்-இந்திய மேலாண்மைக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த மேலாண்மைக் கல்வியில், பொறியியல் மற்றும் அதன் தொடர்பான பட்டபடிப்புகளை தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களில் படித்த மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.


இந்தியாவில் செயல்படும் ஜெர்மனி நிறுவனங்களிலும், ஜெர்மனியில் செயல்படும் இந்திய நிறுவனங்களிலும் பணியாற்றும் வகையில் இந்த மேலாண்மைக் கல்வி அமையும்.


4 செமஸ்டர்களைக் கொண்ட இந்த மேலாண்மைக் கல்வி, கலாச்சாரம், ஜெர்மன் மொழி, இந்திய-ஜெர்மன் புரிந்துணர்வு கொள்கைகள் போன்றவை அடங்கியதாக பாடங்கள் இருக்கும்.


இந்த மேலாண்மைக் கல்வியில் சேருவதற்கு, அனைத்திந்திய மேலாண்மை கழகம் நடத்தும் மேலாண்மை தகுதித் தேர்வில் குறைந்தது 600௦ மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மேலும் பல சுற்றுகளில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.


மேலும் விவரங்கள் அறிய gims@psgim.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பிக் கேட்டறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us